கழுத்தில் பாம்புடன் வந்து யாசகம் கேட்ட பெண் - அலறி அடித்து ஓடிய மக்கள்

x

வேலூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் சிலர் பாம்பை வைத்து யாசகம் பெற்றதால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். காட்பாடியில் உள்ள சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் ஒரு பெண் உட்பட 4 பேர் கழுத்து மற்றும் தோளில் உயிருடன் உள்ள ஆள் உயர பாம்பை வைத்துக்கொண்டு யாசகம் பெற்றுள்ளனர். இது தொடர்பாக வீடியோக்கள் வெளியாகி உள்ள நிலையில் இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து வனத்துறையினர் தெரிவித்த போது, விலங்குகளை வைத்து யாசகம் பெறுவது சட்டப்படி குற்றம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.


Next Story

மேலும் செய்திகள்