"அந்த 51 பேருக்கு என்ன சொல்லுவேன்..".. போலீஸ் ஸ்டேஷனில் கதறும் மக்கள்
பொங்கல் சிறுசேமிப்பு திட்டம் பெயரில் சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரைச் சேர்ந்த வரதராஜ், அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்று, தனது மகனுடன் ஏலச்சீட்டு நடத்தியுள்ளார். தீபாவளிக்கு தங்க நாணயம், வெள்ளி பாத்திரம், பொங்கல் சீட்டுக்கு மளிகை பொருட்கள் உள்ளிட்ட கவர்ச்சிகர அறிவிப்புகளை வழங்கியுள்ளார். இதனை நம்பி குடியாத்தம் கே.வி.குப்பம், பேர்ணாம்பட்டு, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்டோர் பணத்தை முதலீடு செய்த நிலையில், கடந்த சில நாட்களாக பொருட்களை தராமல், கடையையும் மூடி வரதராஜ் தலைமறைவாகிவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனால் பணத்தை இழந்த மக்கள் குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் மாதந்தோறும் ஆயிரத்து நூறு ரூபாய் வசூலித்து கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.