வேலை பார்க்கும் வீட்டில் மேஸ்திரி செய்த சம்பவம் - ஆளை வைத்து கடத்தி பெண் ஆடிய பகீர் ஆட்டம்

x

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டாங்குட்டை பகுதியை சேர்ந்தவர் சங்கர். கட்டிட மேஸ்திரியான இவர் தனது நண்பரான ராஜ்குமாரின் உறவினர் சுமதி என்பவரது வீட்டில் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அங்கு இருந்த 4 கிராம் தங்கத்தை திருடி அடமானம் வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான பணத்தை திருப்பி தந்துவிடுவதாக சங்கர் கூறியநிலையில், அவர் கொடுக்காமல் தாமதம் செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுமதி, ராஜ்குமார் ஆகியோர் காரில் சங்கரை கடத்தி சென்று பணம் கேட்டுள்ளனர். இதுகுறித்து சங்கரின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் குடியாத்தம் போலீசார் சுமதி, ராஜ்குமார் உள்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்