``கடைசி எச்சரிக்கை..'' ஆவேசமான அதிகாரி... வைரலாகும் பரபரப்பு வீடியோ
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டார பகுதியில் முறைகேடாக ஓடும் ஆட்டோக்களின் ஓட்டுநர்களை எச்சரித்து மோட்டார் வாகன ஆய்வாளர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. பேரணாம்பட்டு, கே.வி.குப்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடியாத்தம் பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மோட்டார் வாகன ஆய்வாளராக ராஜேஷ் கண்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். அப்பகுதியில் உரிய ஆவணங்கள் இன்று ஓடும் ஆட்டோக்களின் ஓட்டுநர்களுக்கு, ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் பலமுறை அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது. ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாமல் ஆட்டோக்கள் தொடர்ந்து இயக்கப்படுவதால் கடும் கோபம் அடைந்த அதிகாரி, வீடியோ வெளியிட்டு எச்சரித்துள்ளார்.
Next Story