இளம்பெண்ணை குதறி இழுத்து சென்ற சிறுத்தை.. ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலத்தை பார்த்து குலைநடுங்கிய தாய்

x

வேலூர் மாவட்டம் கே வி குப்பம் மேல்மாயில் அருகே துருகம் என்ற கிராமத்தில் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. அங்கு இருந்த அஞ்சலி என்ற 23 வயது இளம்பெண்ணை சிறுத்தை தாக்கி இழுத்துச் சென்றுள்ளது. வீட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் ரத்த வெள்ளத்தில் இளம்பெண் இறந்து கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கதறி அழுதுள்ளனர். தகவலறிந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்ற முயன்றபோது, அப்பகுதி மக்கள் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி சம்பவ இடத்தில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துவிட்டு சென்றார். ஆனால், மாவட்ட வன அதிகாரி வராத‌தால், உடலை எடுத்துச் செல்ல மறுப்புத் தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நேரில் சென்ற மாவட்ட வன அதிகாரி, சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என்றும் உறுதி அளித்த‌தை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்