வீட்டு வேலையில் ஆயுள் தண்டனை கைதி - CBCID விசாரணையில் வெளிவந்த மொத்த உண்மை

x

வேலூர் சிறைக்கைதி வீட்டு வேலைக்கு உட்படுத்தி தாக்கப்பட்டது உண்மை என்பது சி.பி.சி.ஐ.டி விசாரணையில் தெரியவந்துள்ளது.வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியான சிவக்குமார் என்பவரை, சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி தனது வீட்டில் வேலைக்கு உட்படுத்தி தாக்கியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீசார், டி.ஐ.ஜி ராஜலட்சுமி உள்ளிட்ட 14 அதிகாரிகள், காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், ராஜலட்சுமி உள்ளிட்ட 17 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், டி.ஐ.ஜி ராஜலட்சுமி, சிறைக்கைதியை வீட்டு வேலைக்கு உட்படுத்தி தாக்கியது உண்மை என்பது, சி.பி.சி.ஐ.டி போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து நபர்களிடமும் விசாரணை முடிந்த நிலையில், விரைவில் இவ்வழக்கு சம்பந்தமாக சி.பி.சி.ஐ.டி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்