மாமனார் வீட்டில் மருமகன் செய்த பகீர் காரியம் ..! - வேலூரை அதிர விட்ட சம்பவம்

x

வேலூரில் மாமனார் வீட்டிலேயே 57 சவரன் நகையை கொள்ளையடித்த மருமகன் கைது செய்யப்பட்டார்.பாகாயம் பகுதியை சேர்ந்த 67 முதியவர் சாலமன், வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி உயிரிழந்த நிலையில், மகள் மற்றும் மருமகன் இவரது வீட்டிலேயே தங்கியிருந்துள்ளனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மருமகன் சாம் ஜெபதுரை தனது கூட்டாளி உசேன் என்பவருடன் சேர்ந்து, 57 சவரன் நகையை கொள்ளையடித்தார். போலீசார் விசாரணையில் இருவரும் பிடிப்பட்டதை தொடர்ந்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்