பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே அறிமுகம் செய்யப்பட்ட கியா சிரோஸ் கார்
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே கியா நிறுவனத்தின் சிரோஸ் கார், தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை வேளச்சேரியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற விழாவில், அதிகாரப்பூர்வ டீலர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கார் விற்பனை பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கியா சிரோசுக்கு முன்பதிவுகள் குவிந்து வருகின்றன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 25 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி கியா சிரோஸ் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லைன் அல்லது கியா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்கள் மூலம் முன்பதிவு செய்து கொள்ள முடியும். பிப்ரவரி முதல் வாரத்தில் காரின் விலை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story