BREAKING|| ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு - மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை அறிவிப்பு
வீராணம் ஏரியிலிருந்து வினாடிக்கு 2200 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து அவ்வபோது கனமழை கொட்டி தீர்த்து வருவதால் வீராணம் ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு 3028 கன அடியாக வந்து கொண்டிருப்பதால் ஏரியின் பாதுகாப்பை கருதிக் கொண்டு
ஏரியிலிருந்து வினாடிக்கு 2200 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டிருக்கிறது
குறிப்பாக லால்பேட்டை பகுதியில் உள்ள வெள்ளியங்கால் ஓடையில் 1000 கன அடியும்
சேத்தியாதோப்பு பகுதியில் உள்ள வி என் எஸ் எஸ் வாய்க்கால் மூலம் 1200 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்.
தொடர்ந்து வீராணம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தால் வரும் உபரி நீரை அப்படியே வெளியேற்ற திட்டமிடுவதாகவும் தகவல்.
Next Story