விசிகவில் உருவாகும் இன்னொரு தலைவர்?" யாரும் சொல்லாததை முதலில் சொன்ன விஜய்" திருமாவுக்கே அதிர்ச்சி

x

விசிகவில் உருவாகும் இன்னொரு தலைவர்?

"யாரும் சொல்லாததை முதலில் சொன்ன விஜய்"

திருமாவுக்கே அதிர்ச்சி கொடுத்த நெக்ஸ்ட் மூவ்

தமிழக அரசியலில்... குறிப்பாக திமுக கூட்டணியில் புயலை கிளப்பிய ஆதவ் அர்ஜுனாவின் அடுத்த திட்டம் என்ன...? என்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...

செப்டம்பரில் தந்தி டிவிக்கு ஆதவ் அளித்த பேட்டியில், விசிக இல்லாமல் திமுக கூட்டணி வட மாவட்டங்களில் வெல்ல முடியாது; சினிமாவில் இருந்து வந்தவர்கள் துணை முதல்வரா? என கேள்வி எழுப்பியது அரசியல் வட்டாரத்தை பரபரப்பாக்கியது.

நினைத்து போலவே திமுக எதிர்ப்பை தெரிவிக்க, தனிநபர் கருத்து என விலகியது விசிக தலைமை.

இந்த சூழலில் "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" புத்தக வெளியீட்டு விழாவில், 2026-ல் மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும், இங்கு பிறப்பால் ஒரு முதலமைச்சர் உருவாகக்கூடாது என ஆதவ் பேசியது புது புயலை கிளப்பியது

ஆதவ் அட்டாக் எல்லாம் திமுகவை நேரடியாக தாக்க இம்முறை வலுவாக எதிர்ப்பை தெரிவித்தது திமுக. இறுதியாக துணைப் பொதுச்செயலார் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார் ஆதவ்..

அதற்கு ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவ(ன்) மறைவதில்லை என ரியாக்‌ஷன் கொடுத்தார் ஆதவ்... ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிட கூடாது என்று நினைக்கும் மனநிலைதான் மன்னர் பரம்பரைக்கான மனநிலை.. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்தை அந்த மக்களுக்கான அதிகாரம் கிடைக்கும் வரை தொடர்வேன் என்றார் ஆதவ்..

இதன் தொடர்ச்சியாகவே எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரசாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஆதவ்...

அரசியல் அறிவியல் படித்த ஆதவ் அதனை வீணாக்காமல் இன்றைய நிகழ்கால அரசியலை இயக்கும் வியூக யுத்திகளில் தன்னை வலுவாக்கிக் கொண்டவர். அவர் தேர்தல் பணியை தொடங்கியது திமுகவுக்கே..

2015-2016 காலக்கட்டத்தில் நமக்கு நாமே என்ற ஸ்டாலின் பிரசார பயணத்தில் அங்கம் வகித்தவர். வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனத்தை தொடங்கி, 2021 தேர்தலுக்கு திமுக வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்து, அவரோடு முக்கிய பணியாற்றியவர் ஆதவ்.

இப்போது அதே வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனம் மீது ஆதவ் கவனம் திரும்பியிருக்கிறது. அதாவது தேர்தல் அரசியலை அனைவருக்குமான இடமாக வென்றெடுக்கும் இயக்கமாக வீரநடை போட உள்ளதாக அறிவித்துள்ளார் ஆதவ்.

இப்போது மக்கள் சக்தியை எங்கிருந்து சந்திக்க போகிறார், அதாவது விசிகவில் இருந்தா? அல்லது விஜயின் த.வெ.க. உடனா...? இல்லை தனியாகவா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

திமுகவை கடுமையாக எதிர்க்கும் ஆதவ் வெளியிட்டுள்ள வீடியோ, திமுகவுக்காக எப்படி பணியாற்றினோம் என்பதை அழுத்தமாக சொல்கிறது. அதன் பொருள் என்ன...? என்ற கேள்வி எழுகிறது.

ஆதவ் பேசும் அதிகார பகிர்வு ஏற்கனவே விஜய் அறிவித்தது. தலித் முதல்வராக வரவேண்டும் என முதலில் குரல் எழுப்பியவர் விஜய்தான்..

தமிழ்நாட்டில் ஊழலை விஜய் எடுத்து பேசவேண்டும் என பேசி புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற விஜயையே சற்று திரும்பி பார்க்க செய்தார் ஆதவ். ஏற்கனவே திமுகதான் எதிரி என அறிவித்துவிட்ட விஜய்க்கு சப்போர்ட்டாக ஆதவ் பாயிண்ட் எடுத்துக் கொடுத்தது போல அமைந்தது அவரது பேச்சு.

இதனால் அவருடன் கைக்கோர்ப்பாரா? என கேள்வி எழுகிறது. இதற்கு திமுகவை வீழ்த்த விசிகவில் இருந்துக் கொண்டே ஒரு அணியை உருவாக்க முயற்சித்த ஆதவ், இனி விசிகவில் தொடர மாட்டார், திமுக கூட்டணிக்கு பணியாற்ற மாட்டார், விஜய் கட்சிக்கு வியூகம் வகுக்கலாம் என்றார் அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன்.

திமுக மீதான எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்யும் ஆதவ், தலைமைக்கு எதிரான நிலைபாட்டுக்கு சென்றுவிட்டார் எனக் கூறும் பத்திரிக்கையாளர் கோட்டீஸ்வரன், விசிகவில் இன்னொரு தலைவர் உருவாகிறாரா? என்ற பேச்சும் எழுந்துவிட்டது என்றார்.

யாருக்காக ஆதவ் தேர்தல் வியூக பணியை செய்யப்போகிறார் என்ற கேள்வியோடு, தமிழக அரசியல் களத்தில் ஆதவ் புயல் எந்த திசையை நோக்கி வீசப்போகிறது, என்ற கணிப்புகளும் தொடர்கிறது


Next Story

மேலும் செய்திகள்