ரீ ரிலீசான வசந்த மாளிகை.. 70’ஸ் கிட்ஸ் கொண்டாட்டம் | Vasantha Maligai | Madurai | Fans
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வசந்த மாளிகை திரைப்படத்தின் 52-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு, மதுரையில் உள்ள திரையரங்கில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. செவன்ட்டீஸ் கிட்ஸ் சிவாஜி ரசிகர்கள் பலர், பட்டாசு பேண்டு வாத்தியங்கள் முழங்க உற்சாகமாக நடனமாடி கொண்டாடினர். மேலும் வசந்த மாளிகை படத்தின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அங்கு வந்திருந்த முதியவர் ஒருவர், சிவாஜியின் பாடலை பாடியவாறு சிவாஜி ரசிகை ஒருவருடன் சேர்ந்து நடனமாடியது அனைவரது கவனத்தை ஈர்த்தது.
Next Story