மணல் கடத்தி வந்த லாரிகளை பிடித்த VAO, போலீசாரை கொல்ல முயன்ற கும்பல்...நேரில் பார்த்த மக்கள் பேட்டி

x

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே, அனுமதியின்றி மணல் அள்ளியதை தடுக்கச் சென்ற கிராம நிர்வாக அலுவலர், காவலர்கள் மீது லாரி ஏற்றிக் கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.பழனி அருகே ஆயக்குடி பொன்னிமலைசித்தன் கரடு பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக புகார் வந்தது. அதன் அடிப்படையில், அந்தப் பகுதிக்கு கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி, உதவியாளர் மகுடிஸ்வரன் ஆகியோர் போலீசாருடன் சென்று சட்டவிரோதமாக மணல் அள்ளி வந்த லாரிகளை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டார். லாரிகளை காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லுமாறு விஏஓ கருப்புசாமி உத்தரவிட்டு, இருசக்கர வாகனத்தில் போலீசாருடன் அவர்களை பின்தொடர்ந்தார். அப்போது, மணல் கடத்தியவர்கள் லாரியை வேகமாக ஓட்டி, விஏஓ மற்றும் போலீசாரை கொல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த கும்பல் லாரியுடன் தப்பிச் சென்றது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பான புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்