"கேலியும் கிண்டலும்" - வைகோ வீட்டு திருமணம்... வலைதள விமர்சனத்திற்கு பதிலடி | Vaiko
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வீட்டு திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளன. இந்த நிலையில் இதுதொடர்பாக கருத்து பதிவிட்டுள்ள மதிமுக முன்னாள் நிர்வாகியும், வைகோவின் நண்பருமான கேஎஸ் ராதாகிருஷ்ணன், வைகோவுடன் சுமார் 50 ஆண்டு கால பழக்கம் உடையவன் , அவரோடு பல காலம் சேர்ந்து பயணித்தவன் என்ற அடிப்படையில், சமூகம் சார்ந்த மரபுகளை கேலியும் கிண்டலும் செய்வது ஏற்றுகொள்ளமுடியவில்லை என்று தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நபருக்கும் அவர்களுக்கென தனி குடும்ப பொறுப்பு உண்டு என்பதை கிண்டல் செய்யும் நபர்கள் அறிய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். சாமி இல்லை, கடவுள் இல்லை என்பது அவரவர் விருப்பம். ஆனால் மரபு, மதம், பண்பாடு, கலாச்சாரம் என்பது அவரவர் தனி உரிமை. அதை கேலியும், கிண்டலும் செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.