தைப்பூசம் - வடபழனியில் காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

x

தைப்பூசத்தையொட்டி சென்னை வடபழனி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தமிழ்க்கடவுள் முருகனுக்கு உகந்த நாளான தைப்பூசம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை வடபழனி முருகன் கோவிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்ட நிலையில், நீண்ட வரிசையில் நின்று முருகனை வழிபட்டனர்.. மேலும், காவடி மற்றும் பால்குடம் எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்