உபியில் நடுரோட்டில் ரிப்போட்டர் சுட்டுக் கொலை.. பட்டப்பகலில் அரங்கேறிய கொடூரம்
உத்தரபிரதேசத்தில் பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து பத்திரிக்கையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தி நாளிதழில் நிருபராக பணியாற்றி வந்தவர் 35 வயதான ராகவேந்திர பாஜ்பாய் (Raghavendra Bajpai). சித்தாபூரில் உள்ள டெல்லி-லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை பைக்கில் சென்றுகொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென தாக்குதல் நடத்தி, துப்பாக்கியால் சுட்டுள்ளனர். 3 குண்டுகள் பாய்ந்த நிலையில், சம்பவ இடத்திலேயே ராகவேந்திர பாஜ்பாய் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், 4 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story