யுனெஸ்கோ விருது பெற்ற கோவிலுக்கு இப்படி ஒரு நிலைமையா? - வெளியான அதிர்ச்சி காட்சி

x

கும்பகோணத்தில் யுனெஸ்கோ விருது பெற்ற பழமையான கோயிலுக்குள் புகுந்த மழை நீர் புகுந்து குளம் போன்று காட்சியளிக்கிறது. துக்காச்சி கிராமத்தில் 900 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஆபத்சகாயேஸ்வரர் கோயில் உள்ளது. ஓராண்டுக்கு முன்பு கோயில் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில், மழை நீர் கோயிலுக்குள் புகுந்துள்ளது. மழைநீர் வெளியேற வழி இல்லாத‌தால் குளம் போன்று காட்சியளிக்கும் கோயில் வளாகத்தில் பக்தர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் உள்ள நீரை வெளியேற்றும் பணியில் கோயில் நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்