போலீஸ் சொன்ன ஒரு வார்த்தை.. கடுப்பாகி எகிறி எகிறி பேசிய தவெக நிர்வாகி - ஸ்டேஷனிலேயே பரபரப்பு
பழவந்தாங்கலில் வால்போஸ்டர் ஒட்டக்கூடாது எனக்கூறிய போலீசாருடன் தவெக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சென்னையை அடுத்த பழவந்தாங்கல், பரங்கிமலை பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டி வந்து உள்ளனர். இதனை தடுத்த போலீசார் 4 பேரை போஸ்டருடன் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு வந்த தவெக சென்னை புறநகர் மாவட்ட நிர்வாகிகள், போஸ்டர் ஒட்ட தடைக்கான ஆர்டர் காப்பியை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story