சிறுவர்களுக்கு நியாயம் கேட்டு தட்டிக்கேட்ட தவெக நிர்வாகிக்கு நேர்ந்த கதி

x

சிறுவர்களுக்கு நியாயம் கேட்டு தட்டிக்கேட்ட தவெக நிர்வாகிக்கு நேர்ந்த கதி

நாகையில், பட்டாசு வெடிப்பதில் சிறுவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு குறித்து தட்டிக்கேட்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகியை, கோணி ஊசியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்த ராஜா, தமிழக வெற்றிக்கழக மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளரான ராஜாவின் அண்ணன் மகன் லோகேஷ் என்பவருக்கும், செல்லூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரின் உறவினர் மகனுக்கும் இடையே பட்டாசு வெடிப்பதில் தகராறு ஏற்பட்டது. இதில் காயமடைந்து நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை காண நள்ளிரவில் இருதரப்பினரும் வந்தனர். அப்போது, பட்டாசு வெடித்த சிறுவர்களை அடித்தது நியாயமா? என த.வெ.க நிர்வாகி ராஜா சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயக்குமார், கையில் தான் மறைத்து வைத்திருந்த கோணி ஊசியால், ராஜாவின் வயிற்றில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதனால் ராஜா மயக்கமடைந்த நிலையில், வயிற்றில் தையல் போட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய ஜெயக்குமாரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்