முடிவுக்கு வந்த 40 ஆண்டுகால போர் - உலகை திரும்ப வைத்த அறிவிப்பு
துருக்கியில் 40 ஆண்டுகாலமாக நடந்து வந்த உள்நாட்டு போரை நிறுத்துவதாக குர்திஸ் தீவிரவாத அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 1978ஆம் ஆண்டு அப்துல்லா ஓசலான் (Ocalan) உருவாக்கிய குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி, 1984 முதல் கிளர்ச்சியை ஏற்படுத்தி உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வந்தது. இதனால், குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி தடை செய்யப்பட்டதோடு, துரோக குற்றச்சாட்டில் 1999ஆம் ஆண்டு ஓசலான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, 40 ஆண்டுகாலமாக நடந்து வந்த போரை நிறுத்துவதாக சிறையில் உள்ள ஓசலான் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால், அமைதிக்கு வரலாற்று சிறப்பு மிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். 40 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுப் போரில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story