கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு.. "TTF-க்கு மேலும் சிக்கல்" - வனத்துறை அதிகாரிகள் அதிரடி
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் வளர்ப்பு பிராணி போல அரிய வகை மலைப்பாம்பை கையில் சுற்றி வைத்துக் கொண்டு வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. பால் பைத்தான் எனப்படும் இந்த மலைப்பாம்பை முறையான ஆவணங்கள் மூலம் வாசன் வாங்கி இருப்பதாக அவரது வழக்கறிஞர் விளக்கம் அளித்திருந்தார். அதன் உண்மை தன்மை குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். இந்த மலைப்பாம்பு முறையாக வாங்கப்பட்டதா? அல்லது கடத்தல் மூலமாக கொண்டு வரப்பட்டு தரகர்கள் மூலமாக விற்கப்பட்டதா? என பல்வேறு கோணத்தில் வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோதமாக வாங்கி இருந்தால் அந்த மலைப்பாம்பு பறிமுதல் செய்யப்படுவதுடன், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story