டிடிஎஃப் வாசனை கொல்ல முயன்ற போதை ஆசாமி ? - கூலிங் கிளாஸ் உடன் வீடியோ வெளியிட்ட டிடிஎஃப் வாசன்
வாண்டடாக வம்பில் சிக்கி அதனை கன்டென்ட் ஆக்குவதையே வழக்கமாக கொண்டிருக்கும் டிடிஎஃப் வாசன் மீது உள்ளூர் தொடங்கி அண்டை மாநிலங்கள் வரை வழக்கு உள்ளது...
ஏற்கனவே பைக் ஓட்டுவதில் தொடங்கிய சர்ச்சை, கார் பறிமுதல் வரை நீண்டு கொண்டிருக்க..திருப்பதியில் பக்தர்களிடம் ப்ராங்க் செய்து சிக்கினார் வாசன்..
இனியாவது டிடிஎஃப் வாசனின் அட்ராசிட்டி அடங்கும் என எதிர்ப்பார்க்கப்பட, எனக்கு என்டே இல்ல டா என புது சர்ச்சையுடன் வந்து நிற்கிறார் வாசன்...
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சென்ற டிடிஎஃப் வாசன், வரும் வழியில் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் ஒரு நீரோடையில் குளிக்க சென்றுள்ளார்..
அப்போது டிடிஎஃப் வாசனை தூரத்தில் இருந்து பார்த்த போதை ஆசாமிகள் இருவர், என்ன நினைத்தார்களோ தெரியவில்லை...இங்கெல்லாம் குளிக்கக் கூடாது எனக்கூறி கறார் காட்டினராம்...
இந்தப் பிரச்சனை ஒரு கட்டத்தில் வாக்குவாதமாக முற்ற, டிடிஎஃப் வாசனை அடிக்க வந்திருக்கிறாராம் ஒரு போதை ஆசாமி...
ஒரு கட்டத்தில் கையில் இருந்த பொருளை வைத்து தன்னை குத்தினார் என பகீர் கிளப்புகிறார் டிடிஎஃப் வாசன்..
இதில் தனது கையில் கீறல் ஏற்பட்டதாக கூறியுள்ள டிடிஎஃப் வாசன், தன்னை குத்திய நபருடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அதனை வீடியோவாகவும் பதிவிட்டுள்ளார்.
இத்தனை தகராறுக்கு மத்தியிலும் தன்னை ஹீரோ போல் பாவித்துக் கொண்டு பேசி வந்த டிடிஎஃப் வாசன்.. என் ஊரு இது என வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம், தனது ஹீரோயிசத்தை வசனத்தால் வெளிப்படுத்தினார்..
அந்த ஸ்பாட்டில் மட்டுமன்றி, அச்சம்பவத்தை விவரித்து வீடியோவாக வெளியிட்ட போதும், சினிமா படங்களை மிஞ்சுமளவிற்கு வசனங்களால் திணற வைத்து விட்டார் டிடிஎஃப் வாசன்...
இப்படி தன்னை ரியல் லைஃப் மஞ்சள் வீரனாக நினைத்துக் கொண்டு டயலாக் டெலிவரி செய்து வந்த அவர், தனக்கு வரும் பிரச்சினை எல்லாம் மிகப்பெரிய அரசியல் என அதிரடி ட்விஸ்ட் கொடுத்து பேசினார்...
மொத்த வீடியோவிலும் தன்னை முழு ஹீரோவாகவே காண்பித்துக் கொண்ட வாசன், தனக்கென தனி வழக்கறிஞர் வைத்து இவ்விவகாரம் குறித்து டிஸ்கஸ் செய்ததும் குறிப்பிடத்தக்கது..
ஆனால் வீடியோவைக் கண்ட சிலர் எங்கேயோ இடிக்குதே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
காரணம், தன்னை கொல்ல வந்து விட்டதாக கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு டிடிஎஃப் வாசன் வெளியிட்ட வீடியோவும், அதற்கான ஏற்பாடுகளையும் கண்டு குழம்பும் பார்வையாளர்கள், இது ஸ்க்ரிப்டட் கன்டென்ட்டாக இருக்குமோ என சந்தேகித்து வருகின்றனர்.
ஆனால் இவ்வளவு நடந்தும் காவல்துறையில் புகார் அளிக்காதது ஏன்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்த வீடியோ விவகாரம் வெளியாகி இருக்கும் சூழலில் வாசன் தரப்பு புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.