பாம்புக்கே முத்தம்... ஸ்நேக் பாபுவாக மாறிய TTF... கழுத்தை சுற்றிய விவகாரம் - பரபரப்பு அறிக்கை
தமிழ்நாடு வனப் பாதுகாப்புச் சட்ட வழிகாட்டுதல்களின்படிதான், டிடிஎப் வாசன் மலை பாம்பை வைத்திருந்ததாக அவருடைய வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள செல்லப்பிராணி கடையில் இருந்து மலைப்பாம்பு வாங்கப்பட்டதாகவும், அதற்கான சான்றிதழ் செல்லப்பிராணி கடை உரிமையாளரால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வனப் பாதுகாப்புச் சட்டத்தின் வழிகாட்டுதல்களின்படி வழங்கப்பட்ட உரிமம், குடியேற்றச் சான்றிதழ் மற்றும் தடையில்லா சான்றிதழ் ஆகியவை தகுதிவாய்ந்த அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிமீறல்கள் எதுவும் செய்யப்படவில்லை எனவும், அதிகாரிகள் சம்மன் அனுப்பினால் எந்த தயக்கமும் இல்லாமல் ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story