கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை - போலீஸ் விசாரணை
ஸ்ரீரங்கம் அருகே கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட தாயனூரில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை அறிவியல் முதலாமாண்டு படித்து வந்தவர் திவ்யா. கல்லூரி விடுதி அறையில் தனியாக இருந்த அவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த சக மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திற்கும், போலீசாருக்கும் உடனடியாக தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தற்கொலைக்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story