#BREAKING||141உயிர்களோடு வானில் திக் திக்..கன்ட்ரோல் ரூமோடு உரையாடிய ஆடியோ..ஒன்று கூடும் அதிகாரிகள்

x

திருச்சியிலிருந்து ஷார்ஜா செல்ல விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 3 மணி நேரம் வானில் வட்டமடித்து பாதுகாப்பாக திருச்சி விமானத்தில் தரையிறக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை வானூர்தி இயக்ககம் அதிகாரிகள் இன்று அதிகாலை திருச்சி விமான நிலையத்தில் அந்த விமானத்தை ஆய்வு செய்ததோடு தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்ட பிறகு விமான பைலட்டிற்கும் கண்ட்ரோல் ரூமிற்கும் இடையே நடந்த உரையாடல்கள் குறித்த ஆடியோ பதிவு ஆகியவற்றை ஆய்வு செய்ததோடு பைலட்டையும் விசாரணை செய்ததாக தகவல்

திருச்சியிலிருந்து ராஜாவை நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஹைட்ராலிக் பிரச்சனை காரணமாக சக்கரம் உள்ளே இருக்க முடியாமல் கோளாறு ஏற்பட்டு மூன்று மணி நேரம் வானில் பட்டம் எடுத்த அப்படியே எரிபொருளை குறைத்த பிறகு பாதுகாப்பாக திருச்சி விமான நிலையத்தில் அந்த விமானம் தரையறுக்கப்பட்டது விமானத்திலிருந்து 140 பயணிகளும் பாதுகாப்பாக பத்திரமாக மீட்கப்பட்டனர்

அவர்கள் விமான நிலையத்தில் உள்ள முதல் தளத்தில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவுகள் அளித்த பிறகு 16 பயணிகள் மாற்று விமானம் மூலமாக சார்ஜாவிற்கு புறப்பட்டனர்

மீதமுள்ளவர்கள் தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்

இந்த நிலையில் இந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு எவ்வாறு ஏற்பட்டது அதன் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு மத்திய அரசு வானூர்தி இயக்ககத்திற்கு அறிவுரை கூறிய நிலையில் இன்று காலை சென்னை வானூர்தி இயக்கத்தில் இருந்து அதிகாரிகள் திருச்சி விமான நிலையத்திற்கு வந்து தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட விமானத்தையும் மேலும் ஹைட்ராலிக் கோளாறு எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்ததோடு விமான நிலைய கன்ட்ரோல் ரூமில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட பிறகு விமான ஓட்டிக்கும் கண்ட்ரோல் ரூமிற்கும் இடையே நடந்த ஆடியோ உரையாடல்கள் உள்ளிட்டவர்களை ஆய்வு செய்ததாகவும் அதன் பின்னர் விமான ஓட்டியை மற்றும் விமான ஊழியர்களிடம் அந்த அதிகாரிகள் விசாரணை செய்துவிட்டு புறப்பட்டுச் சென்றதாகவும் அவர்கள் புது டெல்லி உள்ள வானூர்தி இயக்கத்தை அதிகாரிகளுக்கு அறிக்கையாக சமர்ப்பிப்பார்கள் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்