அப்பாவை பறிகொடுத்த சோகத்தோடு +1 தேர்வு எழுத சென்ற மாணவி
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே தந்தை இறந்த நிலையில், 11 வகுப்பு மாணவி ஒருவர் தேர்வெழுத சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொய்கைகுடி கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்பவர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த நிலையில், அவரது மகள் ஷாலினி, தந்தை கூறியதை நிறைவேற்றும் விதமாக 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார். தந்தை இறக்கும் முன்பு, கல்வி தான் உன்னை உயர்த்தும் என கூறியதாக அந்த மாணவி தெரிவித்தார்.
Next Story