நாக்கை பிளந்து Tattoo போட்ட சம்பவம்..! திருச்சி மாநகராட்சி நிர்வாகம் அதிரடி | Trichy

x

திருச்சியில் டாட்டூ வரையும் கடை நடத்திய ஹரிஹரன் மருத்துவ விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக நாக்கை பிளவு படுத்தி, டாட்டூ வரைந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருச்சி போலீசார் ஹரிஹரனையும், அவரது நண்பர் ஜெயராமனையும் கைது செய்து விசாரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருச்சியில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை டாட்டூ சென்டர்களை கணக்கெடுக்கும் பணிகளை தொடங்கியுள்ளது. தொடர்ச்சியாக டாட்டூ சென்டர்களை கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்