காரை எடுக்கும் நேரத்தில் காட்டிய அறிகுறி..! 2 அடி பின்னால் வந்ததும் மளமளவென பற்றி எரித்த கார்.. வெளியான அதிர்ச்சி வீடியோ

x

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் திடீரென தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது. லட்சுமி நாராயணன் நகரை சேர்ந்தவர் வேல்வேந்தன். இவர் வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்த தனது காரை எடுக்க முயன்றுள்ளார். அப்போது, காரின் முன்பகுதியில் இருந்து புகை வர உடனடியாக கீழே இறங்கியுள்ளார். சற்றுநேரத்தில் காரானது, தீப்பிடித்து மளமளவென எரிந்துள்ளது. பின்னர், தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்