#JUSTIN || திருச்சியில் ஷாக்..! காவிரி ஆற்றங்கரையில் மீண்டும் ஒரு ராக்கெட் லாஞ்சர் கண்டெடுப்பு.. அதிர்ச்சியில் மக்கள்

x

திருச்சிஅருகே காவிரி ஆற்றங்கரையில் மீண்டும் ஒரு ராக்கெட் லாஞ்சர் கண்டெடுப்பு ராக்கெட் லாஞ்சரை கைப்பற்றிய போலீசார் விசாரணை. போர்க்காலங்களில் ராக்கெட் லாஞ்சர் பயன்படுத்தப்படுகிறது. ராக்கெட் லாஞ்சர்கள் கனரக , ஆபத்தான ஆயுதங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை தொலைதூரத்தில் இருந்து குறி தவறாது தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை. இந்த நிலையில் திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் சிவன் கோயில் அருகில் காவிரி ஆற்று படித்துறையில் சுமார் 1.5 அடி நீளமுள்ள நீல நிறத்தாலான ராக்கெட் லாஞ்சர் கடந்த நவம்பர் 2ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து அப் பகுதி மக்கள் ஜீயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராக்கெட் லாஞ்சரை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த வகையான ராக்கெட் லாஞ்சர் 1950 காலங்களில் அமெரிக்கா - கொரியாவிற்கும் போர் நடந்த காலத்தில் அமெரிக்கா இராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட வகை ராக்கெட் லாஞ்சர் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் தகவல் தெரிவித்திருந்தார். பின்னர் அந்த ராக்கெட் லாஞ்சர் மணலில் புதைக்கப்பட்டு வெடிக்கச் செய்து செயலிழக்க செய்யப்பட்டது. இந்த நிலையில் காவிரி ஆற்றில் அதே இடத்தில் மீண்டும் ஒரு ராக்கெட் லாஞ்சர் செல் கிடந்துள்ளது. அதை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஆற்றில் மீன் பிடித்த போது வலையில் சிக்கியதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிய வந்துள்ளது. மீண்டும் அதே பகுதியில் ராக்கெட் லாஞ்சர் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்