Tasmac-ல் எக்ஸ்ட்ரா வசூல்.. வெளியான அதிர்ச்சி வீடியோ- திருச்சியில் பரபரப்பு

x

மது விற்பனைக்கு QR Code முறை கொண்ட வந்த நிலையிலும், குவாட்டருக்கு கூடுதலாக 5 ரூபாய் கட்டாயமாக வசூலிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

Vovt

திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குமுளூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் QR Code மற்றும் ஸ்கேன் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், அதிக விலைக்கு விற்கப்படுவதை தடுப்பதற்காக QR Code முறை கொண்டுவரப்பட்ட நிலையில், ஒரு குவாட்டருக்கு 5 ரூபாய் அதிகமாக வசூல் செய்வதாக மதுப்பிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து விற்பனையாளரிடம் மது பிரியர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, மது பாட்டில்களை லாரியில் இருந்து இறக்கும் போது, அவர்களுக்கான கூலியை அரசு தருவது இல்லை என்றும், யாரிடம் கேட்பது, உங்களிடம்தான் வாங்க முடியும் என்றும் பகிரங்கமாக விற்பனையாளர் கூறியுள்ளார். கூடுதலாக 5 ரூபாய் வசூலிப்பதால் எதற்காக QR Code முறை கொண்டுவந்தார்கள் என்று மது பிரியர்கள் வேதனையுன் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்