சிக்கிய 3 மாணவர்கள்.. 10 மணி நேர போராட்டத்திற்கு பின் கிடைத்த 1 உடல் - பார்த்து கதறும் பெற்றோர்
திருச்சியில், அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10 பேர், குடமுருட்டி பகுதியில், அய்யாளம்மன் படித்துறையில் இறங்கி குளித்தனர். அப்போது, நீச்சல் தெரியாத ஜாகிர் உசேன், விக்னேஷ், சிம்பு ஆகிய 3 பேரும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கிய மாணவர்களை மீட்பதற்காக ரப்பர் படகு உதவியுடன் காவிரியின் மைய பகுதிக்கு சென்று தேடினர். ஜாகிர் உசேன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மற்ற இருவரை தேடும் பணியில் 40க்கும் மேற்பட்டோர், 2வது நாளாக ஈடுபட்டுள்ளனர். சிலம்பரசன் உடல் மீட்கப்பட்டநிலையில் சுமார், 10 மணி நேர தேடுதலுக்குப் பிறகு விக்னேஷ் என்ற மாணவரின் உடலும் மீட்கப்பட்டது
Next Story