பணத்தை வாங்கிவிட்டு டிமிக்கி கொடுத்த கள்ளக்காதலி கொடூர கொலை.. திருச்சியில் பரபரப்பு

x

துறையூர் அடுத்த கலிங்க முடையான்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் மல்லிகா. கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த இவருக்கும், கோனேரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த உறவினர் பழனிச்சாமி என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததாக தெரிகிறது. பழனிச்சாமிக்கு சொந்தமான பூர்வீக இடத்தை விற்பனை செய்து, அதற்கான முன் பணம் 5 லட்சம் ரூபாயை மல்லிகாவிடம் அவர் கொடுத்துள்ளார். பின்னர் பணத்தை கேட்கும்போது கள்ளக்காதலி மல்லிகா பணம் இல்லை எனக் கூறியதால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பழனிச்சாமி, மல்லிகாவிற்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, அவர் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது, சுத்தியலால் தலையில் அடித்துக் கொலை செய்தார். பின்னர் கொலை செய்த பழனிச்சாமி, துறையூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். மல்லிகாவின் உடலைக் கைப்பற்றிய போலீசார், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்