வெளிநாட்டில் வேலை.. பல லட்சங்களை சுருட்டிய ஜோடிகள் - குட்டு வைத்த போலீஸ்

x

திருச்சி கேகே நகர் பகுதியில் வெளிநாட்டில் வேலை தேடி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த பத்மாவதி மற்றும் கணேசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். திருச்சி, தஞ்சை, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த எண்பதுக்கும் மேற்பட்டவர்கள் இடம் 10 கோடிக்கும் மேல் பணத்தைப் பெற்றுக் கொண்டு போலி ஆவணங்களை இவர்கள் அளித்து வந்துள்ளனர். வேலை கிடைக்காத நிலையில், பணத்தை திருப்பி கேட்ட போது கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இது குறித்து திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் 30க்கும் மேற்பட்ட பாதிக்கபட்டோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் பத்மாவதி மற்றும் கணேசன் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்