சமயபுரம் கோயிலில் பக்தரை அடிக்க பாய்ந்த கோவில் பாதுகாவலர் - வைரலாகும் வீடியோ
சமயபுரம் மாரியம்மன் கோயில் கிழக்கு வாசல் ராஜகோபுரம் அருகே பணியில் இருக்கும் ஒரு சில பாதுகாவலர் கையூட்டு பெற்று கொண்டு பக்தர்களை உள்ளே அனுமதித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பக்தர் ஒருவர் பணம் கொடுக்காமல் சென்றதால் ஆத்திரம் அடைந்த பாதுகாவலர் அவரை தகாத வார்த்தையில் பேசி மரக்கட்டையில் அடிக்க வரும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கோயில் நிர்வாகம் இது குறித்து முறையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆன்மிகவாதிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
Next Story