மண்ணுக்கடியில் உயிரோடு புதைந்த நபர்.."ரொம்ப ஆபத்தான நிலமைல இருந்தாரு"..தீயணைப்புத்துறையினர் பேட்டி

x

பஞ்சகரை அருகே குடிநீர் குழாயில் ஏற்பட்ட பழுதை சரி செய்வதற்காக மண் தோண்டப்பட்டுள்ளது. அப்போது, திடீரென மண் சரிவு ஏற்பட்டதால் மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர் செல்வம் புதையுண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி மண்ணில் சிக்கி இருந்த செல்வத்தை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு தீயணைப்புத் துறையினர் அனுப்பி வைத்தனர். மண் சரிவில் சிக்கிய தொழிலாளரை உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதியினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்