பணியின் போது உயிரிழந்த காவலர் - இறுதிச்சடங்கை முன்னின்று நடத்திய SP வருண்குமார்

x

திருச்சி அருகே பணியின்போது உயிரிழந்த காவலரின் இறுதிச்சடங்கை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இறுதிவரை முன்னின்று நடத்தினார். துவாக்குடியை சேர்ந்த செந்தில்குமார், பெட்டவாய்த்தலையில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றினார். சாலையில் தனியார் பேருந்து மோதியதில், செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், செந்தில்குமாரின் இறுதிச் சடங்கை இறுதிவரை முன்னின்று நடத்தியதோடு, அவரது குடும்பத்தினருக்கு தனது சொந்த பணத்தில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் வழங்கினார்


Next Story

மேலும் செய்திகள்