பிரபல நடிகர் நடித்த விளம்பரம்... சிறுக சிறுக சேர்த்து வைத்த பணம்.. ஒட்டு மொத்தமாக நாமத்தை போட்ட உரிமையாளர்
திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த தனியார் நகைக் கடையில், முதலீடு செய்பவர்களுக்கு 2 சதவீதம் வட்டி தருவதாக, பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் நடிப்பின் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டது. அதனை நம்பி, தமிழகம் முழுவதும் உள்ள கிளைகளில் பலர் 5 லட்சம் முதல் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்தனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக கடையில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக முதலீடு செய்தவர்களுக்கு சரிவர வட்டி கொடுக்காமல் இழுத்தடித்துள்ளனர். மேலும், திருச்சி கடையை தவிர மற்ற கிளைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள் மற்றும் நகை சீட்டு போட்டவர்கள், திருச்சி கடை அருகே உள்ள சாலை ரோடு சிக்னல் முன்பு, திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்
Next Story