எம்.எல்.ஏ பெயரை பயன்படுத்தி மோசடி.. போரம் போசும் வீடியோ வெளியாகி பரபரப்பு..
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் எம்.எல்.ஏ பெயரை தவறாக பயன்படுத்தி 6 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்துல் ரகுமான் என்பவர் மணப்பாறை எம்.எல்.ஏ பெயரை பயன்படுத்தி, மணிவேல் என்பவருடைய மனைவிக்கு அரசு பணி வாங்கித்தருவதாக கூறி 6 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார். இதனை அடுத்து, எம்.எல்.ஏ., அப்துல் சமது பெயரை தவறாக பயன்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, எம்.எல்.ஏ பெயரை பயன்படுத்தி அந்த நபர் பணம் வாங்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
Next Story