"சேவை மைய டேபிளில் தொலைபேசி எங்கே?" - அதிருப்தியான அமைச்சர்
சேவை மைய டேபிளில் தொலைபேசி இல்லாத காரணத்தால் அதிருப்தி அடைந்த உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் ஆசிரியர்களுக்கு சேவை மையம் குறித்து அறிவுறுத்தல்களை வழங்கினார்... திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி படிப்பிற்கான வழிகாட்டுதல்கள், சேர்க்கை விவரங்கள் போன்ற தகவல்களை மாணவர்கள் பெற புதிய உதவி மையம் ஏற்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகளை துவக்கி வைக்க வந்திருந்த அமைச்சர் கோவி செழியன்,
சேவை மைய டேபிளில் தொலைபேசி இல்லாததால் அதிருப்தி அடைந்தார்.. சேவை மைய மேசையில்
தொலைபேசி இல்லாமல் இருந்தால் எப்படி அவர்கள் உடனடியாக தொடர்பு கொண்டு சேவை பெறுவார்கள்
என்று கேள்வி கேட்ட அமைச்சர், உடனடியாக தொலைபேசி வைக்குமாறு துணைவேந்தருக்கும் சேவை மைய நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கினார்.
Next Story