ஒரே மேடையில் அமர்ந்து ஜல்லிக்கட்டை பார்த்த அமைச்சர் அன்பில் மகேஷ், விஜயபாஸ்கர்
திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர், ஒரே மேடையில் அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்தனர். விஜயபாஸ்கரின் சின்னகொம்பன் காளை களமிறக்கப்பட்டு வெற்றிபெற்ற நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ், சைக்கிளை பரிசாக அளித்தார். சூரியூரில் மூன்று கோடி ரூபாய் மதிப்பில் நிரந்தர ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைத்து தரப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்த நிலையில், அதற்கான அரசாணையை சூரியூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினரிடம், அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்.
Next Story