திருச்சி சமயபுரம் கோவில் அருகே அதிர்ச்சி.. பெண் பக்தருக்கு நேர்ந்த கொடூரம்

x

திருச்சி சமயபுரம் அருகே அம்மன் கோவிலுக்கு வந்த பெண்

பக்தரை கொலை செய்து நகைகளை பறித்துச் சென்ற மர்ம

நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி சமயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் 40

வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடப்பதாக சமயபுரம்

போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்த பெண்ணின் சடலத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். அந்தப் பெண் திருமணமானவர் என்பதும் மர்ம நபர்கள் யாரோ அவரை புடவையால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததும் தெரிய வந்தது. அந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி, தோடு உள்ளிட்ட நகைகள் பறிக்கப்பட்டதற்கான தடயங்கள் இருப்பது தெரிய வந்தது. அந்தப் பெண் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தபோது,

அவரை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் கழுத்தை சேலையால்

நெறித்து கொலை செய்துவிட்டு, நகைகளை பறித்துச் சென்றது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்