இறப்பு நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பியதொழிலதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி-திருச்சியே பரபரப்பில்

x

இறப்பு நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பிய தொழிலதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி - திருச்சியே பரபரப்பில்

திருச்சியில், காவலாளியை கட்டி போட்டு, ஒப்பந்தக்காரர் வீட்டில், நகை மற்றும் 40 லட்சம் பணத்தை கொள்ளையர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த தொழிலதிபரான சண்முகம் ஒப்பந்தக்காரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருச்சி கருமண்டபம் அருகே உள்ள பொன் நகர் இரண்டாவது மெயின் ரோட்டில், சொந்தமாக வீடு உள்ளது. இந்நிலையில் உறவினர் ஒருவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்த நிலையில்,

இறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, சண்முகம், குடும்பத்துடன் ஒரத்தநாடு சென்றுவிட்டார். அவரது வீட்டிற்கு வெளியே காவலாளி வீட்டை பாதுகாக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். செவ்வாய்க்கிழமை இரவு, மர்ம கும்பல்,சண்முகம் வீட்டுக்குள் கொள்ளை அடிக்கும் திட்டத்துடன் நுழைய முயன்றுள்ளது.

அதிர்ச்சி அடைந்த காவலாளி

அவர்களை தடுத்து நிறுத்த முயற்சி செய்தார். இருப்பினும் அந்த கும்பல் காவலாளியை தாக்கி, அவரது கை, கால்களை கயிற்றால் கட்டி போட்டு விட்டு, வீட்டின் உள்ளே சென்றனர். பீரோவை உடைத்து நகை மற்றும் 40 லட்ச பணத்தை திருடி சென்று உள்ளனர்.இந்த கொள்ளை குறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்