என்கவுன்டரில் இறந்த ரவுடிக்கு இன்ஸ்டாவில் ஐடி ஓபன் செய்த சிறுவர்கள்.. எஸ்பிக்கு கொலை மிரட்டல்?.. பரபரப்பு வீடியோ.. நேரில் அழைத்த திருச்சி எஸ்பி
போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடிக்கு ஆதரவாக பேசி, தனக்கு கொலை மிரட்டல் விடுத்த சிறுவர்களை பிடித்து திருச்சி எஸ்பி அறிவுரைகள் வழங்கினார்.
திருச்சியை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஜெகன். இவர் மீது கொலை கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையிலிருந்த நிலையில் கடந்த ஆண்டு என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இந்நிலையில் ஜெகனுக்கு ஆதரவாக இன்ஸ்டாவில் கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் மூலம் ஜெகனுக்கு ஆதரவாகவும், போலீசாரை மிரட்டும் தொனியிலும் தொடர்ந்து வீடியோக்கள் வெளியாகி வந்தன. "சம்பவங்கள் தொடரும்" "ரெட் அலர்ட்" உள்ளிட்ட தலைப்புகளில் வீடியோக்கள் வெளியிடப்பட்டு வந்த நிலையில், திருச்சி எஸ்பி போட்டாவை வைத்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தும் வீடியோ வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Next Story