நள்ளிரவில் வீட்டிற்குள் வந்து கணவனை டெக்னிக்கலாக ஊசி போட்டு கொன்ற திருநங்கைகள் - காவல் காத்த மனைவி

x

திருச்சி மாவட்டம் சஞ்சீவ் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் குணா சுலோச்சனா தம்பதி. குணா ஆட்டோ ஒட்டுநராக வேலை பார்த்து வந்தார். தாய் காமாட்சி மற்றும் சுலோச்சனாவுடன் ஒரே வீட்டில் வசித்து வரும் குணா மது மற்றும் கஞ்சாவுக்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது. இதனால் தினமும் போதையில் இருவரையும் தாக்கி வந்து இருக்கிறார். இந்த நிலையில் மது போதை காரணமாக குணா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்.இது தொடர்பாக தகவல் கிடைத்த போலீசார் குணாவின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேதப் பரிசோதனை முடித்து குணாவின் உடல் சுலோச்சனாவிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. குணாவின் உடலைப் பார்த்துக் கதறி அழுது அவருக்கு இறுதிச் சடங்கை நடத்தி முடித்து இருக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்