திருச்சியில் திகில்.. மயானத்தில் உடலுக்கு திடுக்கென உயிர் வந்ததால் மக்கள் அலறி ஓட்டம்
இறந்ததாகக் கருதி மயானத்திற்கு தூக்கிச் செல்லப்பட்ட மூதாட்டி திடீரென உயிருடன் எழுந்து அமர்ந்ததால் பீதியில் உறைந்து போயினர்....திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சுரக்காய்பட்டியைச் சேர்ந்த 65 மூதாட்டி சின்னம்மாள் கடந்த 16ம் தேதி பூச்சி மருந்து சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது... மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நிலை மோசமனதால் உறவினர்கள் சின்னம்மாளை வீட்டுக்கு அழைத்து வந்தனர்... அதன்பிறகு பேச்சு மூச்சில்லாததால் சின்னம்மாள் இறந்து விட்டதாகக் கருதி மயானத்திற்குத் தூக்கிச் சென்றனர்... அங்கு அவருக்கு இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகளைத் துவங்கலாம் என்று நினைத்த உறவினர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது... இறந்ததாகக் கருதப்பட்ட மூதாட்டி சின்னம்மாள் திடுக்கென கண் விழித்து எழுந்தார்... இதைக் கண்டு பீதியில் உறைந்த உறவினர்களுக்கு என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை... குழப்பம் கலந்த மகிழ்ச்சியுடன் மூதாட்டியைத் தூக்கிக் கொண்டு மீண்டும் மருத்துவமனைக்கு ஓடி சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது... இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது...