ரயிலுக்குள் பேக்கை வைத்துவிட்டு வருவதற்குள் ரத்த வெள்ளத்தில் துடித்த நண்பன் - பதறிய நொடி | Thenkasi

x

சங்கரன்கோவில் அருகே உள்ள வாசுதேவநல்லூரை சேர்ந்த 24 வயது இளைஞர் செல்வராஜ் விவசாய வேலைகளை பார்த்து வந்தார். இந்நிலையில், நண்பரான ராமச்சந்திரனுடன் பொதிகை ரயிலில் சென்னை செல்வதற்காக சங்கரன்கோவில் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். முதலாவது நடைமேடைக்கு ரயில் வந்தவுடன் செல்வராஜ் இரயிலில் ஏற முயன்றுள்ளார். அப்போது, மறைந்திருந்த மர்ம நபர்கள் செல்வராஜை கை, தலை, முகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயங்கரமாக வெட்டிவிட்டு அருகே உள்ள முட்புதர் வழியாக தப்பி ஓடிவிட்டனர். இதில் அவரது ஒரு கை துண்டான நிலையில், ரத்த வெள்ளத்தில் செல்வராஜ் நடைமேடையில் சரிந்து விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஒடி வந்த ராமச்சந்திரன் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் செல்வராஜை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அரிவாள் வெட்டுக்கான காரணம் குறித்து சங்கரன்கோவில் டவுன் காவல்துறையினரும், இரயில்வே போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த காட்சிகள் வெளியாகி ரயில் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்