திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களை குறிவைத்து திருநங்கைகள் ஆசிர்வாதம் செய்வதுபோல் நடித்து வலுக்கட்டாயமாக பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

x

திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களை குறிவைத்து திருநங்கைகள் ஆசிர்வாதம் செய்வதுபோல் நடித்து வலுக்கட்டாயமாக பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுமட்டுமன்றி, பக்தர்களிடம் வாக்குவாதம் செய்வதும், தாக்கி பணம் பறிப்பதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் எச்சரிக்கை விடுத்தும் திருநங்கைகளின் அட்டகாசம் குறையவில்லை. இந்நிலையில் கோயிலுக்கு வந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த புதுமணத் தம்பதியிடம் திருநங்கைகள் பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர். அந்த பக்தர் 200 ரூபாய் கொடுத்தபோது, அதை வாங்க மறுத்த திருநங்கைகள், 500 ரூபாய் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது அங்கு வந்த போக்குவரத்து போலீசாரைக் கூட அவர்கள் பொருள்படுத்தாமல் அந்த புதுமணத் தம்பதியை தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான செய்தி, ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பரவியதைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய ரீனா, மாயா மற்றும் தனுஷ்கா ஆகிய மூன்று திருநங்கைகளையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்