சரியாக சென்ற ரயில் லூப் லைனுக்கு சென்றது எப்படி..? - வெளியான அதிமுக்கிய தகவல்

x
  • கவரப்பேட்டையில் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் லூப் லைனுக்கு சென்றது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. விபத்து நேரிட்ட இடத்தில் இந்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சௌதிரி மற்றும் ரயில்வேயின் முதன்மை பாதுகாப்பு தலைவர் கணேஷ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். குறிப்பாக இன்டர்லாக் பகுதியில் செயல்பாடுகள் குறித்து முழுமையாக ஆய்வை மேற்கொண்டனர். தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் ரயிலை கவிழ்க ஏதேனும் சதி நடந்ததா? என்ற கோணத்தில் ஆய்வு செய்து சென்றனர். மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டும் விபத்து நேரிட்ட பகுதியில் சோதனை நடத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செளதிரி, விபத்துக்கு மனித கோளாறா? அல்லது சிக்னல் கோளாறா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, விசாரணை நடத்தி வருகிறோம், விசாரணை முடிந்த பிறகே எதுவும் தெரியவரும் என்றார். கவாச் பொருத்தியிருந்தால் விபத்து தவிர்க்கப்பட்டு இருக்கலாமே என கேட்டதற்கு, கவாச் சிஸ்டத்திற்கும், இந்த விபத்துகுக்ம் எந்த தொடர்பும் இல்லை என்றார்

Next Story

மேலும் செய்திகள்