ரயில்மோதி காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழப்பு

x

ரயில்மோதி காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழப்பு

வாணியம்பாடி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தவர் சிறப்பு உதவி ஆய்வாளர் மேரி ஸ்டெல்லா. இவர் இன்று சென்னை உயர்நீதிமன்றம் செல்லவதற்காக வாணியம்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மேரி ஸ்டெல்லா, கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் தன்பாத் விரைவு ரயில் மோதி படுகாயம் அடைந்தார். உடனடியாக அங்கு இருந்த பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்