ரயில் படியில் நின்றவருக்கு நேர்ந்த கொடுமை... பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ

x

ரயில் படியில் நின்றவருக்கு நேர்ந்த கொடுமை... பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ

ரயில் படியிலிருந்து தவறி விழுந்த நபர், கை துண்டான நிலையில் மீட்கப்பட்ட காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ராமநாதபுரம் மாவட்டம் கள்ளர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். 47 வயதான இவர், சொந்த ஊரில் இருந்து வெளியேறி, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தி வந்தார்.இந்த நிலையில் இவர் திருச்சியில் இருந்து காரைக்கால் செல்லும் பயணிகள் ரயிலில் நாகப்பட்டினம் செல்வதற்காக பயணித்துள்ளார். அப்போது படியில் நின்று பயணித்த ஜெயக்குமார், நிலை தடுமாறி விழுந்து, நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையில் சிக்கி உள்ளார். உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு, ரயிலின் அடியில் கிடந்த ஜெயக்குமார் மீட்கப்பட்டார். இந்த விபத்தில் அவரது கை துண்டானது. மீட்கப்பட்ட ஜெயக்குமாருக்கு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் மீட்கப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்