இனி ரயிலில் சென்றால் இதுவும் கிடைக்கும்.. பயணிகளுக்கு வரப்பிரசாத திட்டம் ஆரம்பம்

x

ரயிலில் துணி உறையோடு கம்பளி வழங்கும் திட்டம் முதல்முறையாக மதுரையில் அறிமுகம் செய்யப்பட்டது.ரயில்களில் குளிர்சாதன பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு படுக்கை விரிப்பு துணிகள், கம்பளி போர்வை வழங்கப்பட்டு வருகிறது. இதில் படுக்கை விரிப்புகள் ஒவ்வொரு பயன்பாட்டுக்கு பிறகு சலவை செய்யப்பட்டாலும் கம்பளி போர்வை மட்டும் 15 நாட்கள் அல்லது 30 நாட்களுக்கு ஒரு முறை உலர் சலவை செய்யப்படுகிறது. ஒருவர் பயன்படுத்தும் கம்பளியை சலவை செய்யாமல் மற்றொருவர் பயன்படுத்தும் சூழலில், இதுகுறித்து பயணிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். இந்த சூழலில், சுகாதாரமான கம்பளிப் போர்வை வழங்க தெற்கு ரயில்வேயில் முதன்முறையாக மதுரை கோட்டத்தில் சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளது. பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் துணி உறையோடு கம்பளி வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. துணி உறைகள் கம்பளி போர்வையோடு வெல்குரோ ஒட்டும் முறைப்படி ஒட்டி வெளியே வராமல் பாதுகாக்கப் படுகிறது‌. கம்பளி போர்வையின் சுகாதாரத்தை பேணி, உபயோகிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியை வரவேற்கும் பயணிகள், ரயில்வேக்கு நன்றியும் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்